Sunday, 21 July 2013

தெரியாத... காட்சிகள்!

மஞ்சள்
வெய்யில்
மயக்கத்தில்
மெளனச் சிரிப்பு!

மன்மத
கனவுகளுக்கு
மதி மயக்கம்!

உரு தெரியா
உணர்ச்சிகளில்
சிறு உறக்கம்!

சிந்தனை
தெளியுமுன்னே
கலக்கம்!


அவளின்
நினைவுகளில்
இடைமறித்த
நிழல்கள்!

என் விழித்திருந்த
கண்களில்
பாய்ந்த அம்புகள்!

அதோ அவளின்...
சிரித்த முகத்தின்
சின்னக் காட்சி!

இப்போதோ...
எனக்கு
காட்சி தெரியாத
கண்கள்!

No comments:

Post a Comment