புயல் சீற்றம்!
மரத்தடியில்
தூளி கட்டி
செல்லமாய்
குழந்தையை
தூங்கவிட்டேன்!
இதயத்தை
வருடும்
இனிய தாலாட்டு
தென்றலாய் வீசியது!
அயர்ந்து தூங்கிய
மழலையின்
இனிமை
அடித்த காற்றில்
மறைந்து போனது!
ஆம்... தென்றல்
புயலாய் மாறியது!
குழந்தை விழித்து
அழுதது!
நான்...
கலங்கி நின்றேன்!
காலத்தின் மாற்றம்!
No comments:
Post a Comment