Saturday, 6 July 2013

சிறகொடிந்த பின்...

உதிர்ந்த பூக்கள்
உல்லாசத்தை
நினைத்தது!

உருவமற்ற
மனதிற்குள்...
தெளிவான
சிந்தனை!

தேம்பி
அழுதாலும்
தெவிட்டாத
இனிமை!

அவளின்
உறவுகள்...
எனது சிறகுகள்
ஒடிந்த பின்னே
மருந்துகள்!


காலைக்
கதிரவனால்,
எனது குருட்டு
கண்களுக்கு
வெளிச்சம்!

அவளின்
சிரிப்பு சிதறல்கள்...
என் கல்லறைக்கு
வந்து விழும்
சிறு மலர்கள்!

இயற்கை
எனைப்பார்த்து,
சற்று நேரம்
சிரிக்கட்டும்!
நான் அழுகிறேன்!

No comments:

Post a Comment