Saturday, 13 July 2013

அழியப் போவதில்லை!

எனது
தன்மான
உணர்ச்சிக்கு,
உன்னையே
பரிசாய்
தந்தவளே!

என்னிடம்
தஞ்சம் பெற்ற
உன் நெஞ்சம்,
நிச்சயமாய்
மீளப் போவதில்லை!


உரசிய உடல்கள்
ஒன்று சேர
மறுத்தாலும்...
அன்பில்
ஊறிய இதயங்கள்
உலரப் போவதில்லை!

ஆம்...
நம் காதல்
என்றென்றும்
அழியப்போவதில்லை!


No comments:

Post a Comment