அடிபட்ட புலிக்கு
மருந்து போட்டவன்,
புலிக்கு இரையாகி
போனான்!
தடுமாறும் விளக்கை
தூண்டிவிட்டவன்
கை சுட்டுக்கொண்டான்!
ஊர்க்கிணறு
தோண்ட புறப்பட்டு
போனவன்
புதைந்து போய்
செத்தான்!
சகமனிதனுக்கு
பரிந்து பேசியவன்
பலியாகி போனான்!
பாசப்பிணைப்புக்கு
பயந்து நின்றவன்
பழிச்சொல்லுக்கு
ஆளானான்!
நேர்மைக்கு
துணை போக
நினைத்தால்...
மனிதனே!
நீ! நிச்சயம்
குற்றவாளி ஆவாய்!

No comments:
Post a Comment