Wednesday, 3 July 2013

வஞ்சகர்கள்!

முடிவற்ற
நிகழ்வுக்கு
முற்றுப்புள்ளி!

உதவாக்கரைக்கு
ஏற்படும்
தடுமாற்றம்!

ஏமாற்றுபவனுக்கு
அடிபணியும்
புதிய உலகம்!


உள்ளொன்று
வைத்து
வெளியொன்று
பேசும் வீணர்
கூட்டத்தில்
வீசும் ஏகாந்தம்!

தவறை மட்டுமே
செய்பவன்,
தவறை பற்றி பேசும்
அவல நிலை!

அவசரத் தவறுக்கு
சற்று நேர அமைதி!
இது உலகின்
நியதி!

உண்மை
ஒளிந்து கொண்டது!
மனிதனே!
புதியக்கண்ணாடியில்
உற்றுப் பார்!
நயவஞ்சகர்கள்
நன்றாய்
தெரிவார்கள்!

No comments:

Post a Comment