Saturday, 20 July 2013

சிதைந்த இதயத்தை...

சிதறிப்போன
இதழ்களை
சீர்படுத்தி
பூவாக்கினேன்,
உனக்கு
சூடுவதற்காக!

உடைந்த
புல்லாங்குழலை
ஒட்டவைத்து
உருவாக்கினேன்...
நீலாம்பரி
இசைப்பதற்காக!


ஓடிய மேகங்களை
கூப்பிட்டு பேசி
மழை வேண்டினேன்...
உன் மனதை
குளிர்விப்பதற்காக!

ஆனால்...
சிதைந்த
என் இதயத்தை
எங்ஙனம்
ஒன்று சேர்ப்பேன்?

No comments:

Post a Comment