Thursday, 26 September 2013

ஏகாந்தம்!

மனசுக்குள்
மகிழம்பூ வாசம்!
கோட்டை வாசலில்
கொந்தளிப்பின் உச்சம்!

இரத்த வாடையில்
இனம் புரியாத
இறுமாப்பு!


கோடை மணலை
துழாவிய...
அசுரக்காற்று,
கண்களில்
நீர்த் துளிகள்!

கனவுகள்...
போர்க் கொடியாய்!
ஏகாந்தம்...
எப்போது வீசும்?

ஏக்கத்தின்
உச்சம்...
அவளின்
வருகைக்காக!

No comments:

Post a Comment