Friday, 6 September 2013

அவர்கள்...

இலக்கிய
நயத்தின்
இதய...
வருடிகள்!

இதயம் தந்த
இன்னிசையின்
ரசிகர் கூட்டங்கள்!


இதமாய்
இருந்தபோது
உரசியும்,
ஓலமிட்டபோது
ஓடியும்
சென்றவர்கள்!

இப்போது
என் இதயம்
செயலிழந்த
செய்தி...
நிச்சயமாய்
மகிழ்விக்கும்
அவர்களை!

No comments:

Post a Comment