Sunday, 22 September 2013

மங்கிய இருள்!

உனக்குள்
வீசிடும்
தென்றலில்
சிரிக்கிறேன்!

உனக்குள்
வீசிடும் புயலில்
தவிக்கிறேன்!

நீ சிந்தும்
கண்ணீரில்
மிதக்கிறேன்!

கோபத்தில்
நீ அடிப்பதை
மிதமாய்
தாங்குகிறேன்!

என்னை
எட்டி உதைக்கும்
போது...
நிமிராமல்
தலைகுனிகிறேன்!


நீ சிரிக்கும்
போது...
அழுகிறேன்!
வேதனையில்!

நீ வானத்தில்
வட்டமிடும்
போது...
பூமியை
ஏளனம் செய்கிறாய்!

நீ பூமியை
உலா வரும்போது...
வானத்தை
கேவலம் செய்கிறாய்!

நீ ஓங்குகிற
கைகள்...
அடிப்பதற்கா?
அணைப்பதற்கா?
சிந்திக்கிறேன்!

குழப்பத்தில்
என் வாழ்வு
மங்கிய இருளில்!

No comments:

Post a Comment