தொடர்கதை!
ஏறுகிற கொடிக்கு
எட்டாத கிளைகள்!
ஊறி வரும் நீருக்குள்
எண்ணற்ற கிருமிகள்!
இயற்கையின்
சீற்றத்தில்
சிரித்தபடி அவள்!
வாவென்று
அழைத்தேன்...
போனாள்!
போவென்று
சொன்னேன்
வந்தாள்!
இதய உஞ்சலில்
அவள்...
முன்னுக்கு பின்
முரணாய்!
அவள்...
தொடர்வாள்!
நான்...
தொடர்வேன்!
காலம்...
தொடரும்!
No comments:
Post a Comment