Tuesday, 3 September 2013

நினைவுகள்!

அவளை
தொடர்பு கொண்ட
அந்த நிமிடங்கள்...
உணர்ச்சி கொந்தளிப்பின்
உச்சக்கட்ட பரிதவிப்பு!

எல்லையற்ற இலக்குக்கு
புதிதாய் ஒரு வழி!
இன்ப தேசத்தின்
இணையற்ற
வெள்ளி விழா!

காற்றாய், குரலாய்,
இனிமையாய்,
அவள்... முழுமையாய்,
ஒரே நொடியில்
என் உடலுக்குள்!


உல்லாசப் பயணத்தில்
சிறு தடங்கல்...
இப்போது அவளில்லை!
மீண்டும் அவளின்
நினைவுகள்...
ஓலங்கலாய்!

No comments:

Post a Comment