Wednesday, 5 March 2014

அமைதியாய்!

அன்பில் ஊறிய
அற்புத மழை,
அதிசயமாய் தோன்றிய
அழகுமிகு வானவில்,
அனிச்ச மலராய்
அவளின் வருகை...
 


அள்ளி முகர்ந்தேன்!
அத்துடன் முடிந்தது,
அவசரக் காதல்!
அதோ! புதிய வாழ்வு...
அடியெடுத்து வைக்கிறேன்,
அமைதியாய் இல்லறத்தில்!

No comments:

Post a Comment