உலகமே...
நான் பார்த்தேன்,
அவளும் பார்த்தாள்!
அவள் பார்த்தாள்,
நானும் பார்த்தேன்!
இமையசையாமல்
நாங்களும் பார்த்தோம்!
அதிர்ச்சியாய்
நீங்களும் பார்த்தீர்கள்!
அதிசயமாய்...
இந்த உலகமே பார்த்தது!
இனி யார்
பார்க்க வேண்டும் நம்மை?
கண்ணே!
இனியாவது நாம்...
கண்ணசைத்து
காதல் செய்வோமா?
No comments:
Post a Comment