Thursday, 6 March 2014

கவிதையின் தோழி!

உன் இதய வீணையில்
தமிழின் தாகமும்,
காதலின் சோகமும்,
இனிய ராகங்களாய்...
கண்டேன்!
 


தமிழால், தமிழ் அன்பால், 
எனது சோகத்துக்குள்ளும்
சுக ராகம் மீட்ட...
நட்பு நாடினாய், 

கவிதை தாகத்தால்!
இனி நாம் துயர
நெஞ்சங்களுக்கு...
இதமான கவிதை
படைப்போம்! வா தோழி!

No comments:

Post a Comment