Tuesday, 18 March 2014

அழாதே தம்பி அழாதே!

அப்பாவும் அடிக்கவில்லை,
அம்மாவும் அடிக்கவில்லை,
மாமாவும் திட்டவில்லை,
மாமியும் கரிச்சி கொட்டவில்லை!

ஏனழுதாய் சொல்லி அழு?
ஏனழுதாய் சொல்லி அழு?

அண்ணனும் எதிர்க்கவில்லை,
அண்ணியும் ஒதுங்கவில்லை,
அக்காவும், தங்கையும்,
மச்சானும் தவிர்க்கவில்லை!

ஏனழுதாய் சொல்லி அழு?
ஏனழுதாய் சொல்லி அழு?

 
உன் நெஞ்சத்தில் விளையாடி,
உன் கற்பனையை கனவாக்கி,
உன்னை ஏமாற்றி மறைந்தாளே...
அவளை நினைத்தா அழுகிறாய்?

ஏனழுதாய் சொல்லி அழு?
ஏனழுதாய் சொல்லி அழு?

காதல் இருள் படிந்த உலகில்
உல்லாசம் தரும் வெளிச்சம்...
இல்லை என்றா அழுகிறாய்?

ஏனழுதாய் சொல்லி அழு?
ஏனழுதாய் சொல்லி அழு?

உன் மனதின் சுமை குறைக்க...
உலகின் ஒரு மூலையில்
அரவணைக்க நானிருக்கேன்!
அழாதே தம்பி அழாதே!
 

No comments:

Post a Comment