Friday, 25 January 2013

காதலுக்கு சாதியுண்டு!!

காதலுக்கு சாதியில்லை-என்ற
கனிவான சொல்லை
காலம் காலமாய்,
கவிஞன் சொன்னான்!

கன்னிப்பெண்ணே-நானும்
கடைசிவரை கனவுடன்,
கவிஞன் சொல்லில்
கலங்கிவிட்டேன்!

காவிய சொல்லை,
கடைமடையில் தள்ளிவிட்டு,
காதலுக்கு ஆண்சாதி,
கள்ளமான பெண்சாதி
காலத்தில் உண்டென்று,
கண்ணிமையில் காட்டிவிட்டாய்,
உன் கள்ளமான பெண்மனதை!

கண்ணே!
காதலுக்கும் சாதியுண்டு!
காலத்தின் புதுமொழி!

No comments:

Post a Comment