Monday, 28 January 2013

சரித்திரங்கள் சல்லடை கண்கள்!

மயிலே!
உன்னைப் பற்றி,
நான் கூறிய
வெவ்வேறு
வார்த்தைகள்,
இதயத்தை
சல்லடை
கண்களாக்கிவிட்டு
வந்தவை!

இதயத்தில் இரத்தம்
சீா்பட துடிக்கிறது,
ஆயினும்
பார்வையில் பணிவில்லை
நோக்கில் துணிவில்லை!
உன் செயல்
எனக்கு புதி(ர)தன்றோ?

செவ்விதழ் விரித்த
செம்மை செல்வி
உன் செங்காந்தல்
விழியினிலே,
செழுமையில்லை
செவ்வியளே!

கார்குழல்
முன்வைத்து,
களியுடல் காட்டி
கண்ணை கண்ணால்
கண்பட வைத்து,
கடைசியில்
உரசி வீசுகின்றாய்
வெப்பம்!

களவில் ஒழுகி
கண்டபடியாகிவிட்டேன்
கண்ணே
உன்னையெண்ணி!

மிதவெப்பக் காற்று
உன் வாயில்
இனிமை சொற்களை
தாங்குமாயின்,
அதுவே நமக்கு
மூன்றெழுத்தின்
ஆரம்பம்!

புகழ் சொற்கள்
ஏராளம் நின்னைப்பற்றி
மணந்தபின் சொல்ல
பதிவில்லை என்னிடம்!

உன் கவிமொழியின்
சொற்கள் தாங்க
காத்திருக்கிறது
என் இதயம்!
கண்டபடி கூறி
வெம்புண்ணில்
வேல்கொண்டு
பாய்ச்சுவாயென்று
எண்ணவில்லை நான்!

நிச்சயமாய்
என் இதயத்துளைகள்
உன் மூன்றெழுத்து
வார்த்தையை
உட்செல்ல
வழிவிடும் நலமாய்!




No comments:

Post a Comment