Monday, 28 January 2013

பெண்ணே உன் இனம் மோசம்!

உன்னை
நான் நோக்கினேன்,
கண் சிமிட்டினாய்
என்னை பார்த்து!

கூப்பிட்டு
பேசினேன்,
குழைந்தாய்
என்னிடம்!

வாவென்று
சொன்னேன்,
வந்தாய்
என்னுடன்!

ஏதேனும் பேசு
என்றேன்,
பேசினாய்
காதல்மொழி!

ஏதேனும்
கொடு என்றேன்,
கொடுத்துவிட்டாய்
கன்னத்தில்
அ(றை)தை!

பெண்ணே!
உன் இனம்
மோசமானது!

No comments:

Post a Comment