ஓரேழு நாளில்,
உழலவைத்தாய்!
உன் பொன்னுடல்
காணாமல்-கண்ணே!
கற்பனை பல வளர்த்து,
கலங்கிவிட்டேன்!
கண்ணில் நீரோ
கானல் நீராகிவிட்டது!
நெஞ்சக்கதவின்
தாழ்பாலவிழ்த்து,
கொஞ்ச சொல்லி
உனையழைத்து,
கஞ்சக்காரணமாய்
பார்வையிலே
சஞ்சலம் பலவளர்த்து,
சலித்துவிட்டேன்!
நீ செப்புமொழி
நான் கேட்க,
உயர் சிந்தைதனில்
படியமைத்து,
சிறிதுசிறிதாய்
ஏறி வந்தால்,
உன் சின்னக்கரம்
அசைத்தோடினாயே!
கன்னக்கதுப்பில்
முகம் புதைத்து,
எண்ணச் சிறகினை
விரித்துவிட்டு,
சில்லென்று பறந்து
வந்தேன் நானும்,
சிற்றுடல் நோக
சிறகொடிந்தேன்!
உனை பிரிய
உரமில்லை என்னில்!
உள் மனதில்
பதிந்துவிட்டாய் நீ!
செக்கச்சிவந்த
செவ்வுதடுக்கு,
தக்க நேரத்தில்
உணவளிப்பேன் நான்!
நீ! மறவாய்!
உழலவைத்தாய்!
உன் பொன்னுடல்
காணாமல்-கண்ணே!
கற்பனை பல வளர்த்து,
கலங்கிவிட்டேன்!
கண்ணில் நீரோ
கானல் நீராகிவிட்டது!
நெஞ்சக்கதவின்
தாழ்பாலவிழ்த்து,
கொஞ்ச சொல்லி
உனையழைத்து,
கஞ்சக்காரணமாய்
பார்வையிலே
சஞ்சலம் பலவளர்த்து,
சலித்துவிட்டேன்!
நீ செப்புமொழி
நான் கேட்க,
உயர் சிந்தைதனில்
படியமைத்து,
சிறிதுசிறிதாய்
ஏறி வந்தால்,
உன் சின்னக்கரம்
அசைத்தோடினாயே!
கன்னக்கதுப்பில்
முகம் புதைத்து,
எண்ணச் சிறகினை
விரித்துவிட்டு,
சில்லென்று பறந்து
வந்தேன் நானும்,
சிற்றுடல் நோக
சிறகொடிந்தேன்!
உனை பிரிய
உரமில்லை என்னில்!
உள் மனதில்
பதிந்துவிட்டாய் நீ!
செக்கச்சிவந்த
செவ்வுதடுக்கு,
தக்க நேரத்தில்
உணவளிப்பேன் நான்!
நீ! மறவாய்!
No comments:
Post a Comment