Monday, 28 January 2013

மல்லிகையே! நீ பாவம்!

மனம் பரப்பும்
மல்லிகையே!
மாரி பொழிய
பூத்தாலும்,
மாறி மாறி
தலையமரும்
மல்லிகையே!

பெண்குணம்தான்
மாறுமென்றால்,
நீயுமா பெண்ணடிமை?

பெண்பித்தன்
நானிருக்க,
உனக்கேன்
அவப்பெயர்?

செடியொன்றில்
பூத்தாலும்,
ஒருத்தியிடம்
இல்லாத
மல்லிகையே!
நீ! பாவம்
பெண்ணினத்தால்!

No comments:

Post a Comment