Wednesday, 23 January 2013

என்னே உன் விந்தை!

தூரத்து பச்சையாய்
எட்டாமிலிருந்த
வானத்து விண்மீன்களும்,
வட்டமிடும் நிலவும்,
நாம் சென்றுவரும்
சுற்றுலா தலங்களாய்!

பூமிக்கு துணையாய் நின்ற
கோள்களெல்லாம்,
மனிதன் இளைப்பாறும்
இனிய பூங்காக்களாய்!

அதோ! அந்த இனியவானில்,
தனித்து வாழ்ந்து வந்த
விண்கோள்களுக்கு
துணையாய்
செயற்கை கோள்கள்!

உலகை சுருக்கி வலைத்து
பின்னப்பட்ட
வலைபின்னல்கள்!
நொடிபொழுதில்
கனிணி தொடர்புகள்,
விருந்துக்கு தொலைகாட்சி!

இனிமை பல தந்துவிட்டு,
இயற்கை மாறாமல்
இனிமையாய்
காட்சிதரும்
இனிய வானே!

எனக்குள் எழுந்த
கேள்விக்கெல்லாம்
உன் விந்தைகள் மட்டுமே
பதிலாய்!

No comments:

Post a Comment