Friday, 25 January 2013

உண்மைக் காதல்!!

செங்கமல தேன்வண்டே!
நீ சுற்றி சுற்றி வந்தாலும்,
உள்ளே தேனை வைத்து
அசையாமலிருக்கும்,
அம்மலரை!

அலையும் உனைக்கண்டு,
ஆதங்கத்தால் இதழ்மூடி,
அன்புக்கதவை காதற்தேனை,
அடைத்து வைத்து காத்திருக்கும்,
அம்மலரை!

உன் அற்ப கண்களுக்கு
தனித்து தடுமாறும் மலராய்,
தடம் மாறி தெரிந்தாலும்,
உண்மையில் இயலாத
காரணத்தை எண்ணி,
நொந்துவிடும்
அம்மலரை!

கனவிலும் உன்பொருட்டு
காதலில்லையென்று,
எண்ணிவிடாதே!
அந்த தேன்மலர்,
காத்திருந்து இதழ்விரித்தலே,
உண்மைக்காதல்!

No comments:

Post a Comment