உலகெல்லாம் உலை வைத்து,
உணவு சூட்டினிலே சல்லாபித்து,
சிங்கார தென்றல் சீர்பரவ,
சிற்றின்பம் காணும்பொழுதுறங்கு!
மகரந்தம் பல உண்டு களித்து,
மயக்கத்துடன் ரீங்காரமிட்டு,
துணையுடன் இசைபாடும்
தேனி கலவும்பொழுதுறங்கு!
சந்திரனிடம் சல்லாபித்து,
இதழ் விரிக்கும் மலராம்-அல்லி,
தன் மயங்கிய பார்வையிலே,
காதலனை நோக்கையிலுறங்கு!
பகலெல்லாம் பக்கத்துணையுடன்,
பல இடமலைந்து திரிந்து-பவழ
பச்சிளங்கிளி தன் கூட்டில்,
பசித்து இருக்குங்காலுறங்கு!
பகல் கழித்து போவோரை எல்லாம்,
இரவினிலே இனிமையாய் கண்டு,
அகன்ற பார்வையிலே தன்னினம்,
தேடும் ஆந்தையுடனுறங்கு-நீயும்!
உணவு சூட்டினிலே சல்லாபித்து,
சிங்கார தென்றல் சீர்பரவ,
சிற்றின்பம் காணும்பொழுதுறங்கு!
மகரந்தம் பல உண்டு களித்து,
மயக்கத்துடன் ரீங்காரமிட்டு,
துணையுடன் இசைபாடும்
தேனி கலவும்பொழுதுறங்கு!
சந்திரனிடம் சல்லாபித்து,
இதழ் விரிக்கும் மலராம்-அல்லி,
தன் மயங்கிய பார்வையிலே,
காதலனை நோக்கையிலுறங்கு!
பகலெல்லாம் பக்கத்துணையுடன்,
பல இடமலைந்து திரிந்து-பவழ
பச்சிளங்கிளி தன் கூட்டில்,
பசித்து இருக்குங்காலுறங்கு!
பகல் கழித்து போவோரை எல்லாம்,
இரவினிலே இனிமையாய் கண்டு,
அகன்ற பார்வையிலே தன்னினம்,
தேடும் ஆந்தையுடனுறங்கு-நீயும்!
No comments:
Post a Comment