Tuesday, 29 January 2013

நீதான் என் காதலி!

நீ சேற்றில் முளைத்தாய்,
செந்தாமரை! என்றேன்.
குப்பையில் கிடந்தாய்,
குன்றுமணி! என்றேன்.


கடைக்கண் காட்டினாய்,
காதலி! என்றேன்.
செவ்வுதடு விரித்தாய்,
ஆருயிரே!என்றேன்.

சிரித்தாய் நீயும்,
சிந்தனைச்செல்வி
என்றேன்!
வாய் விரித்தாய்,
வானுலகே! என்றேன்.

உன் திறந்த வாயால்,
செருப்பென்றாய்!
சிந்தை மயங்கி,
செத்தேவிட்டேன்!

ஒ! என்னிடம் உனக்கு,
காதல் இல்லை போலும்!
ஆனாலும் நான் உன்னை
காதலிக்கிறேன், கண்ணே!
என் உயிருடன் உயிராய்,
நீதான்! என் காதலி!

No comments:

Post a Comment