Thursday, 24 January 2013

தமிழா இன உணர்வு கொள்!!

சேர, சோழ, பாண்டியர் கூடி ஒருமித்து,
பேணி வளர்த்த தமிழ்- நம் தமிழ்!
பிற்சோழர், களப்பிறர், நாயக்கர்,
கிழக்கிந்தியர் கூடிபிறந்த தமிழினம்-நாம்!
அத்துனைபேரும் வாழ்ந்து மறைந்த
தமிழகம் நம்நாடு எனக்கொள்வீர்!
குணத்தால், இனத்தால், பாகுபாடின்றி
ஓங்கி வளர்ந்த தமிழோ -நம்மொழி!

பின், சாதிசண்டை, ஊர்வழக்கு
ஏன் நமக்கு எனக் கொள்வீர்!
சரித்திரம் வேண்டாம் சாதியுங்கள்
என்நாளும் நாம் தமிழர் என்று!
தன்மானத்துடன் வாதிடுங்கள்
நாமனைவரும் தமிழடிமை என்று!
கவிமிகு தமிழ்மொழியொழிய-எம்
மொழியும் ஏற்கமாட்டோம் என்றுரைப்பீர்!

என்சாண் உடலுக்குள் ஊட்டிய சோறு,
தாய்ச்சோறு- அது தமிழ்சோறு என்க!
உடலசைவு ஒவ்வொன்றும் தமிழ்,
உள்ளம் உள்ளவரை தமிழ் என்க!
வரும் புதியதோர் தலைமுறைக்கும்,
தமிழ்மொழியில் சொல்லுண்டு என்க!
வெவ்வேறு இனம் கொண்ட தமிழ்நாடு,
தமிழனை மட்டுமுடையது-இனம்கொள்க!

No comments:

Post a Comment