Wednesday, 23 January 2013

தமிழன்னை!

தஞ்சமென வந்தவர்க்கு இடமளித்து,
தகுந்த மொழி தந்திட்ட இளமாதே!
இல்லை என்று சொல்லாமல்-சொல்
வழங்கும் கண்கவர் கற்பகமே-உன்
மக்கள்தனை மடிதனில் சீராட்டி-தமிழ்
எனும்பாலுட்டி இசையெனும் இனிப்புடன்
இன்பசுகம் அளித்திட்ட தமிழ்மாதே-உன்
காலடியில் வீழ்ந்திருக்கும் தமிழ்மகன் நான்!

களஞ்சியமே! களங்கமிலா உன்மடிதனில்
தவழவேண்டிய தமிழ்மக்கள்- கடல்
தாண்டி சீர்கெட்டு பேர்கெட்டு- உன்
கண்கள் முன்னே கசக்கபடுகின்றனரே!
மூன்றாம்கண் வேண்டுமோ முத்தமிழே,
சுட்டெரிக்க முடியாதோ உன் மக்களால்?
அன்னையே! வீரப்பால் ஊட்டினாயோ
அல்லது மரத்துபால் ஊட்டினாயோ-தமிழனுக்கு!

நான் எழுதிய இக்கவிதை மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி 88-89 ஆம் ஆண்டு
மலரில் வெளியான கவிதையாகும்

No comments:

Post a Comment