Monday, 28 January 2013

காய்க்கும் மரங்கள்!

அடி பெண்ணே!
மயிலே, குயிலே
என்று பழங்கவிதை
பாடினேன்!

கண்ணே, கனியமுதே
என்று காதல்மொழி
பேசினேன்!

ஆனால் நீயோ,
காதல்மணம் வீசி
கொஞ்சி விளையாடி,
கடைசியில்
கடைமடையில்
தள்ளிவிட்டாய்
என்னை!

காய்க்கும் மரத்தில்
கல்லடி நிச்சயம்!
ஆம்! ஆண்கள்...
பெண்கள்
காதல்செய்து
ஏமாற்ற,
காய்த்து குலுங்கும்
மரங்கள்!

No comments:

Post a Comment