Sunday, 27 January 2013

செண்பகமே!

செண்பகமே!
சிறகடித்து பறக்கும்
உன்னை,
சிற்பமாய்
செதுக்கிவிட்டேன்,
உள் மனதில்!

உன் சிறகசைவில்,
தனித்தனியாய்,
இன்பவலி
பெற்றுவிட்டது,
என் மனம்!

பறந்து செல்ல
முயன்றாயானால்,
என் இதயச்சிறை
உடைந்துவிடும்,
உள்ளக்கதவு
தகர்ந்துவிடும்!

சிற்ப செண்பகமே!
உயிர் பெற்று
தங்கிவிடு,
காதலுடன்
என் இதயத்தில்!

No comments:

Post a Comment