என் இதயத்தின்
அளவேயிருக்கும்,
சின்னஞ்சிறு
தேன்சிட்டே!
உன் சிறிய இதயத்தில்,
பரந்த எண்ணத்தை,
பெற்றுவிட்டாய் நீ!
அதனால்தனோ,
ஆசைநாயகியுடன்,
ஆழ்ந்து குலவுகிறாய்!
என் பலுவான இதயம்
கருவுற்று காத்திருக்கிறது!
நிறைகுடம் ததும்பாது,
எனினும் உனக்காக
நிறைமாத என் இதயம்,
பிரசவிக்கும் நிச்சயமாய்
என் காதலியை!
தேன்சிட்டே!
அதன்பின்னே
நான் தருவேன் சிறு இடம்,
இதமாய் பறந்து வந்து
இனிமை பரப்பிவிடு!
என் இதயத்தில்!

No comments:
Post a Comment