Wednesday, 27 November 2013

தவளைக்கு மட்டும்!

பாம்புக்கு
தலையையும்,
மீனுக்கு வாலையும்,
காட்டும்
விலாங்கு மீன்கள்
பெருமை கொள்ள
தேவையில்லை!


இரட்டை வாழ்க்கை
என்பது நிரந்தரமல்ல!
மீனிடமும்
பாம்பிடமும்
தப்பிக்கும்
விலாங்கை அழிக்க,
காத்திருக்கும்
மற்றுமொறு விலங்கு!

மனிதனே!
இரட்டை வாழ்க்கை
உனக்கு
தேவையில்லை
விட்டுவிடு!
அது தவளைக்கு
மட்டும் போதும்!

No comments:

Post a Comment