Sunday, 10 November 2013

கதிரவனாய்...

உதிரம் கொதிக்கிறது,
உயிர் சிரிக்கிறது,
உறவு ஓலமிடுகிறது,
பிரிவு தவிக்கிறது!

காவல் உறங்குகிறது,
உணர்வு சல்லாபிக்கிறது,
பசுமை ஒளிர்கிறது,
கருமை அழைக்கிறது!


அவள் ஏங்குகிறாள்,
அவன் இறங்குகிறான்,
அன்பு பாய்கிறது,
அரவணைப்பு தேய்கிறது!

மூடிய முகிலுக்குள்
முகம் நுழைத்த
கதிரவனாய்...
நான்!

No comments:

Post a Comment