Friday, 1 November 2013

இருண்டபின் ஒளி!

அவன்
சுவைத்து
முடித்து,
வீசி எறிந்த
மா... விதை
மீண்டும்
தளிராய்!


செத்து மடிந்த
மானின் தோல்,
அழகிய... தோல்
பொருள்களாய்!


சிதைந்து
புதைந்த காடுகள்,
நிலக்கரிகளாய்!


சிப்பியின்
வயிற்றில் சிக்கிய
சிறு மணல்கூட
முத்துக்களாய்!













காதல்...
இருண்ட பின்னும்
ஒளிரும்!

No comments:

Post a Comment