ஆடிக்காற்றில்
அழகு பட்டம்
பறக்கவிட்டதுவும்,
ஆடு புலி
ஆட்டத்தில்...
ஆடு... புலியை
வெட்டியதுவும்,
அண்ணனை
உப்பு மூட்டை ஏற்றி
கீழே விழுந்து
புரண்டதுவும்!
தாயக்கட்டை
விளையாடி...
முறுக்கு சீடை
தின்று தீர்த்ததுவும்,
தட்டாம்பூச்சி
பிடித்து,
வாலில் நூல்
கட்டி பறக்க
விட்டதுவும்,
காகிதக்கப்பல்
செய்து,
மழை நீரில்
ஓட விட்டதுவும்,
சிறு மணல்
வீடு கட்டி,
இலவசமாய்
கடல் காற்று
வாங்கியதுவும்,
பூவரசன்
இலையில்
பீப்பியும்,
பூவரசன் பூவில்
தங்கமோதிரம்
செய்து
விளையாடியதும்,
சப்பாத்தி பழம்
சாப்பிட்டு,
வாயும் உதடும்
சிவக்க சாயம்
பூசிக்கொண்டதும்,
புத்தக பக்கங்களின்
இடுக்கில்,
மயில் குட்டி
போட்டதுவும்,
கண்ணைக் கட்டி
ஒளிஞ்சான் புடிச்சி
விளையாடியதுவும்,
கொலை கொலைக்கா
முந்திரிக்கா விளையாடி
சுற்றி சுற்றி ஓடியதும்,
ஒரு குடம் தண்ணீ ஊத்தி
ஒரே பூ....பூத்ததுவும்,
சடு குடு விளையாடி
ஆற்று மணலில்
புரண்டதுவும்,
பகல் முழுதும்
பம்பரம்...
வட்டக்குத்தும்,
சாட்டையடியும்
வாங்கியதும்,
குழி பளிங்கி,
பேந்தா பளிங்கி
விளையாடி,
அம்மாவிடம்
அடி வாங்கியதும்,
கிட்டிப் புல்
விளையாடி...
வீரப் புண்?
பெற்றதுவும்,
இடம் மாற்றி...
உப்பு குத்தி
விளையாடி
தேள் கொட்டி
ஓவென்று?
அழுததுவும்,
நரம்பில்
சுருக்கு வைத்து,
பாம்பு பிடித்து,
பயம் காட்டி
விளையாடியதும்,
கெல்டா பெல்ட்டில்
காக்காய் அடித்து,
காக்காய் கூட்டம்
கதறுவதை ரசித்ததும்,
கிச்சி கிச்சி தாம்பூலம்
கீரைத் தண்டு
தாம்பூலம் விளையாடி,
தொடையில் நறுக்கென்று
கிள்ளுவதுவும்,
பல்லாங்குழி
விளையாடி
பசி வந்ததும்...
ஆட்டத்தை
கலைப்பதும்,
குருவி வெற்றிலையும்,
தென்னை மர புது வேரும்,
சுன்ணாம்பும் சேர்த்து
சின்ன புள்ளத்தனமாய்
வாய் சிவக்க வெற்றிலை
போட்டதுவும்,
இல்லையடி! இல்லையடி!!
உன் காதலுக்கு பின்??????
அழகு பட்டம்
பறக்கவிட்டதுவும்,
ஆடு புலி
ஆட்டத்தில்...
ஆடு... புலியை
வெட்டியதுவும்,
அண்ணனை
உப்பு மூட்டை ஏற்றி
கீழே விழுந்து
புரண்டதுவும்!
தாயக்கட்டை
விளையாடி...
முறுக்கு சீடை
தின்று தீர்த்ததுவும்,
தட்டாம்பூச்சி
பிடித்து,
வாலில் நூல்
கட்டி பறக்க
விட்டதுவும்,
காகிதக்கப்பல்
செய்து,
மழை நீரில்
ஓட விட்டதுவும்,
சிறு மணல்
வீடு கட்டி,
இலவசமாய்
கடல் காற்று
வாங்கியதுவும்,
பூவரசன்
இலையில்
பீப்பியும்,
பூவரசன் பூவில்
தங்கமோதிரம்
செய்து
விளையாடியதும்,
சப்பாத்தி பழம்
சாப்பிட்டு,
வாயும் உதடும்
சிவக்க சாயம்
பூசிக்கொண்டதும்,
புத்தக பக்கங்களின்
இடுக்கில்,
மயில் குட்டி
போட்டதுவும்,
கண்ணைக் கட்டி
ஒளிஞ்சான் புடிச்சி
விளையாடியதுவும்,
கொலை கொலைக்கா
முந்திரிக்கா விளையாடி
சுற்றி சுற்றி ஓடியதும்,
ஒரு குடம் தண்ணீ ஊத்தி
ஒரே பூ....பூத்ததுவும்,
சடு குடு விளையாடி
ஆற்று மணலில்
புரண்டதுவும்,
பகல் முழுதும்
பம்பரம்...
வட்டக்குத்தும்,
சாட்டையடியும்
வாங்கியதும்,
குழி பளிங்கி,
பேந்தா பளிங்கி
விளையாடி,
அம்மாவிடம்
அடி வாங்கியதும்,
கிட்டிப் புல்
விளையாடி...
வீரப் புண்?
பெற்றதுவும்,
இடம் மாற்றி...
உப்பு குத்தி
விளையாடி
தேள் கொட்டி
ஓவென்று?
அழுததுவும்,
நரம்பில்
சுருக்கு வைத்து,
பாம்பு பிடித்து,
பயம் காட்டி
விளையாடியதும்,
கெல்டா பெல்ட்டில்
காக்காய் அடித்து,
காக்காய் கூட்டம்
கதறுவதை ரசித்ததும்,
கிச்சி கிச்சி தாம்பூலம்
கீரைத் தண்டு
தாம்பூலம் விளையாடி,
தொடையில் நறுக்கென்று
கிள்ளுவதுவும்,
பல்லாங்குழி
விளையாடி
பசி வந்ததும்...
ஆட்டத்தை
கலைப்பதும்,
குருவி வெற்றிலையும்,
தென்னை மர புது வேரும்,
சுன்ணாம்பும் சேர்த்து
சின்ன புள்ளத்தனமாய்
வாய் சிவக்க வெற்றிலை
போட்டதுவும்,
இல்லையடி! இல்லையடி!!
உன் காதலுக்கு பின்??????
No comments:
Post a Comment