Saturday, 1 February 2014

நான் இருளில்!

குமுறும் எரிமலை,
குழப்பத்தில் நான்!
வானுக்கே ...
வலை விரித்தேன்,
விண்மீன் கூட
கிடைக்கவில்லை!

புத்துணர்ச்சியின்
புது தெம்பில்
புதிய புதிய
முயற்சிகள்...
முன்னெற்றம்
இல்லை!


வழி தவறிய
வாழ்வில்,
குறி தவறிய
மனிதன் நான்!

புது வாழ்வுக்காக
பூமியின் சிரிப்பில்,
கேளிப் பொருளாய்...
இருளில் நான்!

No comments:

Post a Comment