Tuesday, 4 February 2014

முகவரியில்லாத...

மோக வலை
விரிக்க எண்ணி,
மேக வலை
விரித்தேன்!
அது மழையாய்
மறைந்த...
மாயம்தான் என்ன?

தாகம் தீர்க்க
தண்ணீரென்று
நினைத்து,
தவறிப்போய்
நஞ்சு உண்ட
வேகம்தான் என்ன?


பாசம் வளர்க்க
நேசமுள்ளவள்
என்று எண்ணி,
மோசம் போன
நிலைதான் என்ன?

முகவரியில்லாத...
அவளின் குடியிருப்பு!
அவசரமாய்...
சிந்திக்காமல்
சீரழிந்த காதல்!

No comments:

Post a Comment